காவல்துறையின் இந்த சோதனையை கண்டித்து நத்தம் பேருந்து நிலையம் அருகே உள்ள ரவுண்டானா அருகில் தமிழர் தேசம் கட்சியின் மாநில மாணவரணி செயலாளர் பூமி, திண்டுக்கல் கிழக்கு மாவட்ட செயலாளர் பிரபு ஆகியோர் தலைமையில் 25 க்கும் மேற்பட்ட தமிழர் தேசம் கட்சியினர் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டு மாநிலத்தலைவர் வீட்டில் சோதனை நடத்தச்சென்ற திருச்சி மாநகர காவல்துறையினை கண்டிக்கிறோம், தமிழக அரசை கண்டிக்கிறோம் என கோஷங்கள் எழுப்பினர்.
சாலை மறியலில் ஈடுபட்டவர்களுடன் நத்தம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்து சாலை மறியல் கைவிடப்பட்டது. இந்த திடீர் சாலை மறியலினால் திண்டுக்கல் கொட்டாம்பட்டி சாலையில் அரை மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.