இதனை அறிந்த பொதுமக்கள் இது குறித்து மாவட்ட ஆட்சியரிடம் பல முறை புகார் அளித்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை என குற்றம் சாட்டுகின்றனர். இந்நிலையில் இன்று போலி பத்திரம் தயாரித்த நபர்கள் ஜேசிபி மூலம் மயானத்தை அகற்றுவதற்கு வருவதாக ஊர் பொதுமக்களுக்கு தகவல் தெரியவந்துள்ளது. இதனைத் தொடர்ந்து சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் மயானத்திற்கு வந்தனர்.
பொதுமக்களைக் கண்டவுடன் ஆக்கிரமிப்பு நபர்கள் ஓடி விட்டதாக தெரிய வருகிறது. இதனைத் தொடர்ந்து கல்லறையில் உட்கார்ந்து ஆண்கள் பெண்கள் என சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் கல்லறை மீது அமர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த அம்பாத்துறை காவல் நிலைய போலீசார் பொதுமக்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு சமாதானம் செய்து வைத்தனர்.