இதனால் ஆத்திரமடைந்த 50-க்கும் மேற்பட்ட 100 நாள் வேலைத்திட்ட பணியாளர்கள் திண்டுக்கல் நத்தம் உலுப்பகுடி பேருந்து நிறுத்தம் அருகே திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் புன்னப்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் நத்தம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்து மறியல் கைவிடப்பட்டது.
இச்சாலை மறியல் போராட்டத்தால் அரை மணி நேரத்திற்கும் மேலாக திண்டுக்கல் - நத்தம் சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.