திண்டுக்கல் அரசு மகளிர் கல்லூரியில் வழிகாட்டு நிகழ்ச்சி

திண்டுக்கல் எம்விஎம் அரசு மகளிர் கல்லூரியில் அரசு பள்ளி மாணவர்களுக்கான உயர்கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி நடைபெற்றது. மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சுதாகர் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், கல்லூரி முதல்வர் லட்சுமி மாணவர்களை வரவேற்றார். மாணவர்கள் தங்கள் மதிப்பெண்களுக்கு ஏற்ப தேர்வு செய்ய வேண்டிய துறைகள் மற்றும் வேலைவாய்ப்புகள் குறித்து விரிவாக விளக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் 200க்கும் மேற்பட்ட மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் பேராசிரியர்கள் கலந்துகொண்டனர்.

தொடர்புடைய செய்தி