கொடைக்கானலில் குதிரை சவாரிக்கு புதிய கட்டுப்பாடுகள் அறிவிப்பு

தமிழ்நாடு கால்நடை மற்றும் பராமரிப்புத் துறையினர் கொடைக்கானல் போன்ற சுற்றுலாத் தலங்களில் குதிரை சவாரிக்கு முறையான வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்ற வேண்டும் என எச்சரித்துள்ளனர். உடல்நலம் குன்றிய, நோய்வாய்ப்பட்ட குதிரைகளை சவாரிக்கு பயன்படுத்தக் கூடாது. நோய் உள்ள குதிரைகளை தனிமைப்படுத்த வேண்டும். குதிரை இருப்பிடங்கள் மற்றும் உபகரணங்களை கிருமிநாசினியால் சுத்தம் செய்ய வேண்டும். கொடைக்கானலில் சுகாதார அலுவலர்கள் குதிரை நிறுத்தப் பகுதிகளை ஆய்வு செய்து அறிவுரைகளை வழங்கினர்.

தொடர்புடைய செய்தி