நத்தம்: கலைக்கல்லூரி அமைக்கப்படும்; நிதி அமைச்சர்

திண்டுக்கல் மாவட்டம் நத்தத்தில் ஒவ்வொரு ஆண்டும் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் 12-ம் வகுப்பு பொது தேர்வு எழுதுகின்றனர். இவர்களின் மேல்படிப்பிற்காக திண்டுக்கல், மதுரை, திருச்சி, சிவகங்கை மாவட்டங்களில் மேல்படிப்பை தொடர உள்ள நிலையில் தங்களுக்கு நத்தத்தில் அரசு கலைக்கல்லூரி அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பல ஆண்டு காலமாக பெற்றோர்களும் மாணவ மாணவிகளும் கோரிக்கை விடுத்து வந்தனர். இந்நிலையில் தமிழக பட்ஜெட்டில் நத்தத்தில் கலைக்கல்லூரி அமைக்கப்படும் என நிதி அமைச்சர் அறிவித்ததை எடுத்து நத்தம் பேருந்து நிலையம் எதிரே பொதுமக்கள் பட்டாசுகள் விடுத்தும் இனிப்புகள் கொடுத்தும் மகிழ்ச்சியை தெரிவித்தனர்.

தொடர்புடைய செய்தி