அரசு பேருந்து மோதி பழனி பாதயாத்திரை பக்தர் பலி

தி.புதுக்கோட்டை மாவட்டம், வலையம்பட்டியைச் சேர்ந்தவர் பெருமாள் மகன் சரவணன் (30). (மின்வாரியத்தில் கேங்மேன்) இவருக்கு திருமணம் ஆகி முத்துலட்சுமி என்ற மனைவியும் 2 பெண் குழந்தைகளும் உள்ளனர். இவர் பழனி தைப்பூசத்தை முன்னிட்டு மாலை அணிந்து புதுக்கோட்டையில் இருந்து நத்தம் வழியாக பழனிக்கு பாதயாத்திரை செய்து கொண்டிருந்தார். அப்போது நத்தம் மெய்யம்பட்டி அருகே சாலை ஓரத்தில் சென்று கொண்டிருந்தபோது பின்னால் வந்த அரசு பேருந்து இவர் மீது மோதி விட்டு நிற்காமல் சென்று விட்டது.

 இதில் பலத்த காயம் அடைந்த சரவணன் சம்பவ இடத்திலேயே பலியானார். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த நத்தம் போலீசார் இறந்தவர் உடலை கைப்பற்றி உடல்கூறாய்விற்காக திண்டுக்கல் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விபத்தை ஏற்படுத்திவிட்டு நிற்காமல் சென்ற அரசு பேருந்து குறித்து நத்தம் போலீசார் தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி