இதில் லாரியின் முன்பக்க டயர்கள் சேதமடைந்து எண்ணெய் சாலையில் வழிந்தோடியது. இந்த விபத்தில் நல்வாய்ப்பாக லாரி ஓட்டுநர் காயங்கள் ஏதுமின்றி உயிர் தப்பினார். இதுகுறித்து சாணார்பட்டி போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். திண்டுக்கல் முதல் கொட்டாம்பட்டி வரை உள்ள 52 கிலோமீட்டர் தூரத்தில் கோபால்பட்டி எரமநாயக்கன்பட்டி மெய்யம்பட்டி ஆகிய மூன்று இடங்களில் மட்டுமே சாலை தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த மூன்று சாலை தடுப்புகளில் இதுவரை 50-க்கும் மேற்பட்ட வாகனங்கள் விபத்தில் சிக்கி சேதம் அடைந்து உயிரிழப்புகளும் ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும், இதுபோன்று அடிக்கடி விபத்து ஏற்படும் பகுதிகளில் உள்ள சாலை தடுப்புகளை உடனடியாக அகற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.
நாளை உதயமாகிறது ஜோஸ் சார்லஸ் மார்டினின் புதிய கட்சி