அப்போது திண்டுக்கல் மாவட்டம் நத்தம் ஒத்தக்கடை அருகே வந்த போது சாலையின் நடுவே இருந்த தடுப்பில் ஒளிரும் பட்டைகள் இல்லாததால் ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி சாலையில் இருந்த சென்டர் மீடியனில் பலமாக மோதி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. லாரி பெரிய அளவில் சேதமடைந்த நிலையில் லாரியில் கொண்டுவரப்பட்ட செங்கல்கள் சாலையில் சிதறி கிடந்தன. லாரியை ஓட்டி வந்த ஆறுமுகம் காயமடைந்தார். சம்பவ இடத்திற்கு விரைந்த சாணார்பட்டி காவல்துறையினர் காயமடைந்தவரை 108 ஆம்புலன்ஸ் மூலம் மீட்டு நத்தம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
மேலும் விபத்து குறித்து சாணார்பட்டி காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர். நத்தம் அருகே ஒத்தக்கடை பாட்சாகடை பிரிவு அருகே சாலை சென்டர் மீடியனில் ஒளிரும் பட்டைகள் இல்லாததால் இரவு நேரங்களில் வரும் வாகனங்கள் அடிக்கடி விபத்தில் சிக்கி வருகின்றன. எனவே உடனடியாக சாலையை பிரிப்பதற்காக ஒளிரும் பட்டைகள் வைக்கப்பட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.