திண்டுக்கல் அருகே மினி பஸ்சை வழிமறித்து கொலை மிரட்டல் விடுத்து கண்டக்டரின் பணப்பை மற்றும் செல்போன்களை பறித்து சென்ற 7 பேர் கொண்ட கும்பலை தாலுகா போலீசார் கைது செய்தனர். இதில் யுவராஜ் மற்றும் ராஜ் (எ) ராசு ஆகிய இருவர் மீது கொலை முயற்சி, வழிப்பறி உள்ளிட்ட வழக்குகள் நிலுவையில் இருந்தன. இருவரையும் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்து மதுரை மத்திய சிறையில் அடைத்தனர்.