இலவச வீட்டு மனை பட்டா கேட்டு திண்டுக்கல் அருகே எரியோடு அருகே குண்டாம்பட்டி பிரிவு அண்ணா நகர் மக்கள் பள்ளி குழந்தைகளுடன் மாவட்ட ஆட்சியர் சரவணனிடம் மனு அளித்தனர். மனுவில் தெரிவித்துள்ளதாவது: திண்டுக்கல் மாவட்டம் எரியோடு அருகே குண்டாம்பட்டி பிரிவு அண்ணா நகரில் கடந்த 45 ஆண்டுகளாக குடியிருந்து வருகிறோம். எங்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா கேட்டு பலமுறை மனு அளித்திருந்தோம். எங்கள் அண்ணா நகர் பகுதியில் 18 குடியிருப்புகள் இருந்தது. அதில் 5 குடியிருப்புக்களுக்கு மட்டும் இலவச வீட்டு மனைபட்டா வழங்கப்பட்டுள்ளது. எங்கள் 13 குடியிருப்புகளுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்கப்படாமல் உள்ளனர். ஆகையால் கலெக்டர் இதனை விசாரணை செய்து எங்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்க வேண்டுமென மனுவில் தெரிவித்திருந்தனர்.