புளியம்பட்டியைச் சேர்ந்த பேபி(28) ஆயுதப்படையில் காவலராகப் பணிபுரிந்து வருகிறார். கடந்த மாதம் வீட்டில் பூச்சிக்கொல்லி மருந்து குடித்து தற்கொலைக்கு முயன்றார். விசாரணையில், கிருஷ்ணகிரி ஆயுதப்படையில் காவலராகப் பணிபுரிந்தபோது, காவலர் வீரமணியுடன் பேபிக்கு பழக்கம் ஏற்பட்டு காதலித்து வந்துள்ளனர். ஆனால், வீரமணி வேறொரு பெண்ணை கடந்த மாதம் பதிவு திருமணம் செய்து கொண்டதால், மன உளைச்சலில் பேபி தற்கொலைக்கு முயன்றது தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் வீரமணியைக் கைது செய்தனர்.