திண்டுக்கல்: பால் வேன் ஓட்டுநர் வண்டிக்குள்ளேயே பலி

திண்டுக்கல் மாவட்டம் தோட்டனூத்து அருகே பாத்திமா நகரைச் சேர்ந்த ஜார்ஜ் பெர்னாண்டோ (42), அமிர்தா பால் நிறுவனத்தின் மினி வேனில் பால் ஏற்றிக்கொண்டு திண்டுக்கல் நோக்கி வந்து கொண்டிருந்தார். நத்தம் அப்பாஸ்புரம் அருகே வந்தபோது, சாலையில் இருந்த சென்டர் மீடியனில் மோதி விபத்துக்குள்ளானதில் ஓட்டுநர் ஜார்ஜ் பெர்னாண்டோ சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். நத்தம் போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் உடலை மீட்டனர். உடற்கூறாய்விற்காக நத்தம் அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி