திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர் ஊராட்சி ஒன்றியப் பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் சரவணன் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். எரியோடு பேரூராட்சி, வடமதுரை-அய்யலூர் சாலையை இணைக்கும் வகையில் சிறப்பு நிதியிலிருந்து ரூ.25.00 இலட்சம் மதிப்பீட்டில் தார்ச்சாலை அமைக்கும் பணியை மாவட்ட ஆட்சித் தலைவர் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். இந்நிகழ்ச்சியில், வேடசந்தூர் வட்டார வளர்ச்சி அலுவலர் சரவணன் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்துகொண்டனர்.