திண்டுக்கல்: குடிநீர் இணைப்பு பணி பொதுமக்கள் வாக்குவாதம்

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே உள்ள வி. எஸ் கோட்டை பஞ்சாயத்துக்கு கட்டுப்பட்டது மார்க்கம்பட்டி. இப்பகுதியில் 50க்கும் மேற்பட்ட விவசாய குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு வி. எஸ் கோட்டை பகுதியில் இருந்து மார்க்கம்பட்டி செல்லும் இரண்டு கிலோமீட்டர் தார் சாலை அமைத்து சுமார் 25 ஆண்டு காலங்கள் ஆகின்றது என்றும் இப் பகுதிக்கு தெரு விளக்கு, கழிவு நீர் ஓடை , சாலை மற்றும் குடிநீர் வசதி செய்து தராமல் இருந்து வந்த நிலையில் அப்பகுதி பொதுமக்கள் பலமுறை ஊராட்சி ஒன்றிய அலுவலகம், ஊராட்சி அலுவலகத்தில் பலமுறை புகார் மனுக்கள் கொடுத்தும். கிராமசபை கூட்டங்களிலும் புகார்கள் கொடுத்தும் எந்தவிதமான அடிப்படை வசதிகளும் செய்து கொடுத்திடாமல். தற்பொழுது தார் சாலை மற்றும் எந்த விதமான அடிப்படை வசதிகளும் செய்து தராமல் ஊராட்சி அலுவலகம் குடிநீர் இணைப்பை இப்பகுதியில் இணைக்கக் கூடாது என்று அப்பகுதி பொதுமக்கள் குடிநீர் இணைப்பு வழங்கும் பணியாக்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பொது மக்களுக்கும் பணியாளர்களுக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதம் முற்றி ஒருவருக்கொருவர் கைகலப்பு ஏற்பட்டு அடிதடி ரகளையாக மாறி சாலை வசதி ஏற்படுத்தி தராமல் நாங்கள் குடிநீர் இணைப்பு பணியை மேற்கொள்ள விடமாட்டோம் என தடுத்து நிறுத்தி உள்ள சம்பவம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

தொடர்புடைய செய்தி