திண்டுக்கல்: அரசு பேருந்தை சிறைபிடித்து போராட்டம்

திண்டுக்கல் அருகே உள்ள சிறு நாயக்கன்பட்டியில் சாலை வசதி, கழிவுநீர் ஓடை வசதி, குடிநீர் வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளை கடந்த மூன்று ஆண்டுகளாக எந்த பணிகளும் செய்து தராததால் பலமுறை மாவட்ட நிர்வாகத்திடம் மனு அளித்தும் தற்போது வரை எந்த பயனும் இல்லை என தெரிவிக்கின்றனர். 

மேலும் மேல்நிலைத் தொட்டி அமைப்பதற்கு பலமுறை மனுக்கள் அளித்து தற்போது அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில் அந்தப் பணியினை செய்வதற்கு அரசு அதிகாரிகள் அரசியல் தலையீடு காரணமாக பணிகள் செய்ய வருவதில்லை எனக்கூறி சிறு நாயக்கன்பட்டி பகுதியில் அரசு பேருந்து சிறைபிடித்து நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். சுமார் 2 மணி நேர போராட்டத்திற்குப் பிறகு அம்பாத்துரை காவல் நிலைய போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். 

அப்போது பொதுமக்கள் சரமாரியாக காவல்துறையினரை கேள்வி எழுப்பினர். அதற்கு உடன்பாடு ஏற்படாத நிலையில் சிறைபிடிக்கப்பட்ட பேருந்து முன் சாலையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு நிலவியது மேலும் கிராம நிர்வாக அதிகாரி வருவாய் அதிகாரி வருகை தந்து உடனடியாக மேல்நிலைத் தொட்டி அமைக்கும் பணியை துவங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

தொடர்புடைய செய்தி