காந்திகிராம வேளாண் அறிவியல் மையத்தின் விஞ்ஞானி சரவணன் பேசியதாவது: உணவுத் தேவையை பூர்த்தி செய்வதற்காக, பாரம்பரிய விவசாய முறை கைவிடப்பட்டது. இன்றைய சூழலில் ரசாயனம், நெகிழி இல்லாமல் மனிதனால் வாழ முடியாது என்ற நிலையில், அவற்றை தவறான முறையில் பயன்படுத்துவதால் மண் வளத்துக்கும், மனிதர்களுக்கும் பாதிப்பு ஏற்படுகிறது. மண் பரிசோதனை அடிப்படையில், தேவையான அளவில் மட்டும் உரங்களைப் பயன்படுத்த நாம் தவறிவிட்டோம். தாவரங்களுக்குத் தேவையான 17 வகையான சத்துக்களில், 12 சத்துக்கள் மண்ணில் இயற்கையாகவே அமைந்துள்ளன. இதை ரசாயனம் இல்லாமல், செடிகளுக்கு கிடைப்பதற்கான வழிமுறைகளை நாம் பின்பற்ற வேண்டும் என்றார் அவர்.
திண்டுக்கல்
திண்டுக்கல்: சப்-இன்ஸ்பெக்டர் தேர்வு.. 3,640 பேர் எழுதினர்