இந்த நிலையில், விளாம்பட்டி ஓடைத் தெருவைச் சேர்ந்த மகேஸ்வரன் (50) என்பவர் அந்தத் தெருவில் கீழே கிடந்த சுருக்குப் பையை எடுத்து பார்த்த போது, அதில் ரூ. 7 ஆயிரம் இருந்தது. இதை விளாம்பட்டி காவல் நிலையத்தில் காவல் ஆய்வாளர் ஷர்மிளாவிடம் அவர் ஒப்படைத்தார். அவர் இந்தப் பணத்தை சரஸ்வதியிடம் ஒப்படைத்தார். இதைத் தொடர்ந்து மகேஸ்வரனின் நேர்மையைப் பாராட்டி காவல் ஆய்வாளர் ஷர்மிளா, மகேஸ்வரனுக்கு சால்வை அணிவித்துப் பாராட்டினார்.
திருப்பரங்குன்றத்தில் காவல்துறையுடன் ஹெச்.ராஜா வாக்குவாதம்