திண்டுக்கல்: டாஸ்மாக்கில் துளையிட்டு கொள்ளை முயற்சி

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே மர்ம நபர்கள் வீமாஸ் நகரில் இயங்கி வரும் டாஸ்மாக் கடையில் துளையிட்டு கொள்ளையடிக்க முயற்சி செய்துள்ளனர். இதனை அறிந்த காவலாளி போலீசுக்கு தகவல் கொடுத்தார். உடனடியாக போலீஸ் வந்ததால் கொள்ளையர்கள் தப்பி ஓடினர். இதனால் ரூ.3 லட்சம் பணம், ரூ.30 லட்சம் மதுபானங்கள் தப்பித்துள்ளது.

தொடர்புடைய செய்தி