இந்நிலையில் மாடு காணாமல் போனது குறித்து நத்தம் காவல் துறையில் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் சிசிடிவி காட்சிகள் அடிப்படையில் விசாரணை செய்த நத்தம் போலீசார் நத்தம் மீனாட்சிபுரம் சத்யா நகரை சேர்ந்த பழனிச்சாமி மகன் சந்திரன் (38), எம்ஜிஆர் நகரை சேர்ந்த பூசாரி மகன் லட்சுமணன் (21) ஆகிய இருவரையும் கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர். மேலும் திருட்டு மாடுகளை வெளியூருக்கு கொண்டு சென்று விற்பனை செய்வதற்காக பயன்படுத்தப்பட்ட மினி வேனையும் போலீசார் பறிமுதல் செய்தனர். இரவு நேரத்தில் மாட்டை திருடிச் சென்ற சிசிடிவி காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திண்டுக்கல்
ஜெயிலுக்குள் கஞ்சா விற்பனை செய்த சிறை காவலர் சஸ்பெண்ட்