மதுரையை சேர்ந்த முருகன் (55) மற்றும் அவரது மனைவி அழகுமீனாள் (50) ஆகியோர், மகன் சரவண பாண்டியுடன் (24) பைக்கில் பூதகுடி பிரிவு அருகே சென்றபோது, காரைக்குடி நோக்கிச் சென்ற அடையாளம் தெரியாத கார் ஒன்று பைக் மீது பயங்கரமாக மோதியது. இதில் அழகுமீனாள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பலத்த காயமடைந்த சரவண பாண்டி மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி நேற்று இரவு உயிரிழந்தார். இந்தச் சம்பவம் குறித்து நத்தம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.