திண்டுக்கல்: ஆட்டோ மீது கார் மோதி விபத்து- ஒருவர் பலி

திண்டுக்கல்லை அடுத்த சாணார்பட்டி அருகே பெட்ரோல் பங்க் ஒன்றில் ஆட்டோ மீது கார் மோதியதில், சாணார்பட்டியைச் சேர்ந்த கந்தசாமி (60) சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவலறிந்து விரைந்த சாணார்பட்டி காவல்துறையினர், கந்தசாமியின் உடலைக் கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி