அய்யாபட்டி காளியம்மன் கருப்புசாமி கோயில் கும்பாபிஷேக விழா

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அய்யாபட்டியில் உள்ள காளியம்மன் கருப்புசாமி கோயிலின் கும்பாபிஷேக விழா நேற்று காலை யாகசாலை பூஜையுடன் தொடங்கியது. புனித ஸ்தலங்களிலிருந்து கொண்டுவரப்பட்ட தீர்த்தக்குடங்கள் மேளதாளத்துடன் ஊர்வலமாக எடுத்துவரப்பட்டு, வேத மந்திரங்கள் ஓத கலசத்தில் ஊற்றப்பட்டது. பக்தர்கள் புனித நீரை பெற்றுக்கொண்டனர். அன்னதானமும் நடைபெற்றது. நத்தம், காந்திநகர், மெய்யம்பட்டி, சீரங்கம்பட்டி உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த பக்தர்கள் கலந்துகொண்டனர். ஏற்பாடுகளை இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் செய்தனர்.

தொடர்புடைய செய்தி