மதுரை சம்மட்டிபுரத்தைச் சேர்ந்த 24 வயது கார் டிரைவர் வெற்றி பிரதாப், காதல் தோல்வியால் மன உளைச்சலில் இருந்ததாகக் கூறப்படுகிறது. சில நாட்களுக்கு முன்பு திண்டுக்கல் ஆர்.எம்.டி.சி. நகரில் உள்ள உறவினர் வீட்டில் தங்கியிருந்த அவர், யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவலறிந்த திண்டுக்கல் தாலுகா போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து உடலைக் கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.