திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே பொய்யம்பட்டியில், துக்கம் விசாரிக்க சென்றபோது ஏற்பட்ட தகராறில் போஸ்பாண்டி என்பவர் அரிவாளால் வெட்டியதில் கணேசன், செல்வமணி, அழகர்சாமி ஆகிய 3 பேர் படுகாயமடைந்தனர். நத்தம் அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். இது தொடர்பாக நத்தம் போலீசார் போஸ்பாண்டியை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.