திண்டுக்கல், மேட்டுப்பட்டியில் கடைக்குச் சென்றுகொண்டிருந்த ரத்தினபோஸ்(65) என்பவரை, தளபதி(27) மற்றும் பிரவீன்லியாஸ்(22) ஆகிய இருவர் ஆபாசமாகப் பேசியுள்ளனர். இதுகுறித்து ரத்தினபோஸ் கேட்டபோது, இருவரும் அவரை ஆபாசமாகப் பேசி இரும்புக் கம்பியால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் குற்றவாளிகளான தளபதி, பிரவீன்லியாஸ் ஆகிய இருவரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.