பட்டிவீரன்பட்டி: ரூ. 40 ஆயிரம் பணம் பறித்த 3 வாலிபர்கள் கைது

திண்டுக்கல், அய்யம்பாளையத்தை சேர்ந்த கண்ணன் மகன் சிவா(52). இவர் விவசாயி. இந்நிலையில் சிவா ஆ நா பிரிவு அருகே இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது அங்கு வந்த திண்டுக்கல் பேகம்பூரை சேர்ந்த அமீர்(31), செம்பட்டி, J. புதுக்கோட்டையை சேர்ந்த சரவணகுமார்(32), கரூர் காக்காவாடியை சேர்ந்த உதயகுமார்(35) ஆகிய 3 பேரும் சிவா வந்த இருசக்கர வாகனத்தை நிறுத்தி கத்தியை காட்டி மிரட்டி கொலை மிரட்டல் விடுத்து உயிர் பயத்தை ஏற்படுத்தி ரூ. 40 ஆயிரம் பணத்தை பறித்ததாக சிவா அளித்த புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற பட்டிவீரன்பட்டி இன்ஸ்பெக்டர் ராஜசேகரன் தலைமையிலான போலீசார் 3 பேரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

தொடர்புடைய செய்தி