திண்டுக்கல் மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் துரை மணிகண்டன், மாநகராட்சி கமிஷனர் செந்தில்முருகனிடம் ஒரு கடிதம் அளித்துள்ளார். திண்டுக்கல் மாநகராட்சி 21-வது வார்டில் காங்கிரஸ் சார்பில் கை சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்ற கார்த்திக் என்பவர், மே 6 அன்று தி.மு.கவில் இணைந்தார். அவரை மாநகராட்சி கவுன்சிலர் பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்று அந்தக் கடிதத்தில் கோரப்பட்டுள்ளது.