திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர் கூட்டத்தில், இல்லம் தேடி கல்வி திட்டத்தில் பணிபுரியும் நூற்றுக்கும் மேற்பட்ட பெண் பணியாளர்கள் தங்களது பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி புகார் மனு அளித்தனர். பயணப்படி வழங்கப்பட வேண்டும், பணி நிரந்தரம் செய்யப்பட வேண்டும், சம்பள உயர்வு மற்றும் அடையாள அட்டை வழங்கப்பட வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.