திண்டுக்கல்: ஆசிரியைக்கு தொல்லை கொடுத்த.. சர்வேயர்

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் துரைக்கமலம் பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிந்து வரும் 42 வயது பெண் கணவரை பிரிந்து தனது குழந்தைகளுடன் வசித்து வருகிறார். திண்டுக்கல்லில் அவர் வசித்து வந்த போது ஜெயசீலன் (45) என்ற சர்வேயர் அவரின் நிலையை அறிந்து அடிக்கடி பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார். நாளுக்கு நாள் அவரது பாலியல் சீண்டல்கள் அதிகரித்தனவே இதுகுறித்து பள்ளி ஆசிரியை சாணார்பட்டி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் ஆய்வாளர் முருகேஸ்வரி, சார்பு ஆய்வாளர் முனியம்மாள் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து பாலியல் தொல்லை கொடுத்த சர்வேயர் ஜெயசீலனை தேடி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி