அகில இந்திய அளவில் உத்தரபிரதேசம், மகாராஷ்டிரா, மும்பை ஹேண்ட்பால் அகாடமி, பீகார், மேற்கு வங்காளம், மத்திய பிரதேசம், தமிழ்நாடு, ராஜஸ்தான், கர்நாடகா, குஜராத், ஆந்திரப் பிரதேசம், ஒடிசா, தெலுங்கானா, கேரளா, உத்தரகாண்ட், ஹிமாச்சல பிரதேசம், திரிபுரா, புதுச்சேரி, சண்டிகர், மும்பை தாத்ரா மற்றும் நகர் ஹவேலி ஆகிய 25 மாநிலங்களைச் சேர்ந்த 500க்கும் மேற்பட்ட விளையாட்டு வீராங்கனைகளும், 30 பயிற்றுநர்களும் கலந்து கொள்கின்றனர். துவக்க விழா போட்டியினை ஜிடிஎன் கல்லூரியின் தாளாளரும், தமிழக கைப்பந்து கழகத்தின் தலைமை ஆதரவாளருமான கே. ரத்தினம் தலைமையுரை ஆற்றி துவக்கி வைத்தார். திண்டுக்கல் மாவட்ட கால்பந்து கழக தலைவர் ஜி. சுந்தரராஜன், பி.எஸ்.என்.ஏ. பொறியியல் கல்லூரியின் துணைத்தலைவர் மற்றும் திண்டுக்கல் மாவட்ட கிரிக்கெட் கழகத்தின் தலைவருமாகிய ஆர்.எஸ்.கே. ரகுராம், திண்டுக்கல் கால்பந்து கழகச் செயலர் எஸ். சண்முகம் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
திண்டுக்கல்
ஜெயிலுக்குள் கஞ்சா விற்பனை செய்த சிறை காவலர் சஸ்பெண்ட்