திண்டுக்கல்: ஆட்டோ டிரைவர் தூக்கிட்டு தற்கொலை

திண்டுக்கல் குமரன் திருநகரைச் சேர்ந்த ஆட்டோ டிரைவர் ஜெரோம்(51) குடும்பப் பிரச்சனை காரணமாக வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவல் அறிந்த நகர் வடக்கு காவல் நிலைய ஆய்வாளர் வெங்கடாசலபதி, சார்பு ஆய்வாளர் சூரிய கலா மற்றும் காவலர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ஜெரோமின் உடலைக் கைப்பற்றி, உடற்கூறு ஆய்வுக்காக திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி