திண்டுக்கல் பேருந்து நிலையத்தில் கடந்த சனிக்கிழமை இரவு பழனி தைப்பூச திருவிழாவிற்கு சென்றுவிட்டு சென்னை திரும்பிக் கொண்டிருந்த ராமநாதபுரத்தைச் சேர்ந்த மாதவன் என்பவரிடம் இருந்து 8.5 பவுன் தங்க நகையை மர்ம நபர்கள் பறித்துச் சென்றனர். இந்த சம்பவம் அப்போது பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாக நகர் வடக்கு காவல் நிலைய போலீசார் விசாரணை நடத்தி, சிறுவன் உட்பட இருவரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 5.5 பவுன் தங்க நகையும் மீட்கப்பட்டு, அவர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர்.