திண்டுக்கல் அருகே மனைவி மறுமணம் செய்ததால், முதல் கணவர் அரிவாளுடன் தகராறு செய்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கருக்காம்பட்டியை சேர்ந்தவர் கருப்பையா. இவருக்கும் ரூபினி என்பவருக்கும் கடந்த 2019-ம் ஆண்டு திருமணம் நடந்துள்ளது. கருத்து வேறுபாடு ஏற்பட்டு இருவரும் விவாகரத்து பெற்றனர். இதையடுத்து, ராஜவேல் என்பவரை ரூபினி மறுமணம் செய்துள்ளார். இதில் இருவருக்கும் குழந்தை பிறந்துள்ளது. இந்நிலையில், 2-வது கணவர் ராஜவேலிடம், முதல் கணவர் கருப்பையா அரிவாளுடன் வந்து தகராறில் ஈடுபட்டுள்ளார்.