திண்டுக்கல்: கனமழை கொட்டப்போகுது

மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, இன்று (ஜூன் 15) தமிழ்நாட்டில் 11 மாவட்டங்களில் கனமழை பெய்யவுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

அதன்படி, ஈரோடு, திருப்பூர், திண்டுக்கல், மதுரை, விருதுநகர், தூத்துக்குடி, ஆகிய மாவட்டங்களில் மாலை அல்லது இரவு நேரங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

மேலும் நீலகிரி, கோயம்புத்தூர், தேனி, திருநெல்வேலி, கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை அல்லது மிக கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் ஆரஞ்சு அலர்ட் விடுத்துள்ளது.

தொடர்புடைய செய்தி