திண்டுக்கல்: கஞ்சா வைத்திருந்த வாலிபர் கைது

திண்டுக்கல், கன்னிவாடி காவல் நிலைய சார்பு ஆய்வாளர் சிவக்குமார் மற்றும் காவலர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது, கன்னிவாடி அருகே சந்தேகத்திற்கிடமாக நின்ற வாலிபரை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில், அவர் குட்டத்துப்பட்டி வெயிலடிச்சான்பட்டியைச் சேர்ந்த முத்துப்பாண்டி மகன் பிரதீப் (25) என்பதும், அவர் பயன்படுத்த கஞ்சா வைத்திருந்ததும் தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் பிரதீப்பை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி