திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டையை அடுத்த கொடைரோடு அருகே உள்ள அம்மையநாயக்கனூரில் நூற்றாண்டு பழமையான அருள்மிகு சுயம்பு முத்துமாரியம்மன் கோவிலில், ஐப்பசி மாத வெள்ளிக்கிழமையை முன்னிட்டு உலக அமைதி மற்றும் மழை வேண்டி பிரம்மாண்ட விளக்கு பூஜை நடைபெற்றது. இதில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண்கள் அம்மனை போற்றி பாடல்கள் பாடி சிறப்பு பூஜையில் ஈடுபட்டனர். பூஜையில் கலந்துகொண்ட அனைவருக்கும் பூஜைக்கான பொருட்கள் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை நிர்வாக குழுவினர் மற்றும் ஊர் முக்கியஸ்தர்கள் செய்திருந்தனர்.