திண்டுக்கல்: நாசம் செய்த காட்டு யானைகள்..வீடியோ

திண்டுக்கல் மாவட்டம், ஆத்தூர் தொகுதி, கன்னிவாடி அருகே உள்ள கருப்பசேர்வைகாரன்பட்டி பகுதியில், கொடைக்கானல் மலை அடிவாரத்தில் சுமார் 100 ஏக்கருக்கும் மேல் பயிரிடப்பட்டிருந்த மக்காச்சோளப் பயிர்களை, உணவுக்காக வந்த காட்டு யானைகள் சேதப்படுத்தின. நடராஜன் என்பவரின் 6 ஏக்கர் மக்காச்சோளத் தோட்டத்தில் நுழைந்த 10க்கும் மேற்பட்ட யானைகள், 3 ஏக்கர் மக்காச்சோளத்தையும், 100 தென்னை கன்றுகளையும், 100 வாழை மரங்களையும் முழுமையாக அழித்து விவசாயிகளுக்கு பெரும் இழப்பை ஏற்படுத்தியுள்ளன.

தொடர்புடைய செய்தி