அந்த இளைஞரைச் சுற்றி வளைத்து பொதுமக்கள் பிடித்தபோது அந்த இளைஞன் தன் கையில் வைத்திருந்த கத்தியால் தன்னைத்தானே வெட்டிக்கொண்டதாகத் தெரிகிறது. மணிபாண்டி இந்தப் பிரச்சனையில் சமரச முயற்சி மேற்கொண்ட திமுக நிர்வாகி காளவாசல் கண்ணன் வீடு உட்பட பல இடங்களில் பெட்ரோல் குண்டு வீச திட்டமிட்டிருந்தது போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது. இதனைத் தொடர்ந்து பெட்ரோல் குண்டு வீசப்பட்ட இடங்களில் வத்தலகுண்டு காவல் நிலைய ஆய்வாளர் (பொறுப்பு) விக்டோரியா நேரடியாக ஆய்வு செய்தார். பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம் தொடர்பாக காளவாசல் கண்ணன் அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திருப்பரங்குன்றம் வழக்கில் நீதிபதிகள் பரபரப்பு கருத்து