ஆத்தூர்: மின்சாரம் தாக்கி 3 பேர் உயிரிழப்பு

ஆத்தூர் அக்ரஹாரத்தில், கொத்தனார் கருப்பையா (41) மற்றும் அவரது மனைவி சுதா (37) ஆகியோர் மின்சாரம் தாக்கி உயிரிழந்தனர். அறுந்து கிடந்த மின்சார வயர் மீது கருப்பையா மீது மின்சாரம் பாய்ந்ததாகவும், அவரை காப்பாற்ற சென்றபோது சுதா மீதும் மின்சாரம் பாய்ந்ததாகவும் கூறப்படுகிறது. மேலும், காப்பாற்ற முயன்ற கல்லூரி மாணவர் சுப்பிரமணியசிவா (18) என்பவரும் உயிரிழந்தார். இந்த துயர சம்பவத்தில் மூவர் பரிதாபமாக உயிரிழந்தனர். இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி