திண்டுக்கல் மாவட்டம், வத்தலகுண்டு பேரூராட்சிக்கு உட்பட்ட பேருந்து நிலைய கழிப்பறைகள், மயான சாலை கறிப்பறைகள், வணிக வளாக கடைகள் நேற்று 10-ம் தேதி ஏலம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. நிர்வாக காரணங்களால் ஏலம் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது. தொடர்ந்து ஐந்து முறை ஏலம் ஒத்திவைக்கப்பட்டதை கண்டித்து விரைவில் போராட்டம் நடத்தப்படும் என அதிமுக நகர செயலாளர் பீர் முகமது தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அதிகாரிகளுடன் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.