வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணி

திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ஜம்புதுரை கோட்டை, காமலாபுரம், மெட்டூர் மற்றும் அம்மைநாயக்கனூர் பேரூராட்சிக்கு உட்பட்ட ஜெகநாதபுரத்திலும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணிகளுக்கான கணக்கெடுப்பு படிவத்தினை மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் சரவணன், வீடுதோறும் சென்று வழங்கினார். இப்பணி 04.11.2025 அன்று தொடங்கி 04.12.2025 வரை நடைபெறும். பொதுமக்கள் வாக்குச்சாவடி நிலை அலுவலர்களுக்கு ஒத்துழைப்பு நல்க வேண்டும். இதுவரை 68,529 படிவங்கள் வழங்கப்பட்டுள்ளன. ஊரக வளர்ச்சித்துறை மற்றும் மகளிர் திட்டம் சுயஉதவிக்குழு தன்னார்வலர்கள் இப்பணியில் ஈடுபட்டுள்ளனர்.

தொடர்புடைய செய்தி