இதனையடுத்து திண்டுக்கல் புறநகர் பகுதியில் குப்பை கிடங்கு அமைக்க பொன்மாந்துரை அருகே இடம் தேர்வு செய்யப்பட்டது. இதனால் கடந்த சில மாதங்களாக முருகப் வனம் குப்பை கிடங்கில் மாநகராட்சி குப்பைகள் கொட்டுவது குறைந்து வந்தது.
இந்நிலையில் தற்போது மீண்டும் குப்பைகள் கொண்டு வந்து கொட்டப்படுவதாக கூறி அப்பகுதி மக்கள் முருகபவனம் குப்பை கிடங்கு முன்பு வாகனங்கள் உள்ளே செல்ல எதிர்ப்பு தெரிவித்து மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் முருகபவனம், கருணாநிதி நகர், முத்துராஜ் நகர், இந்திர நகர் மக்கள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
இது குறித்து தகவல் அறிந்த நகர் மேற்கு போலீசார் மற்றும் 10 வது வார்டு மாமன்ற உறுப்பினர் கிருபாகரன் ஆகியோர் சம்பவ இடம் சென்று மறியலில் ஈடுபட்ட மக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினார். மாநகராட்சி அதிகாரிகள் நேரில் வந்து குப்பைகள் கொட்ட மாட்டோம் என்று உறுதி அளித்தால் தான் போராட்டத்தை கைவிடுவதாக தெரிவித்தனர்.