திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள மாதிரி மேல்நிலைப் பள்ளிகள் மட்டுமன்றி, பெரும்பாலான மேல்நிலைப் பள்ளிகளிலும் உயா்தொழில்நுட்ப ஆய்வகம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த ஆய்வகங்களுக்கு தேவையான கூடுதல் மடிக்கணினிகள் அரசுத் தரப்பில் தற்போது விநியோகிக்கப்பட்டு வருகின்றன. அதன்படி, திண்டுக்கல் கல்வி மாவட்டத்திலுள்ள 93 பள்ளிகள், பழனி கல்வி மாவட்டத்திலுள்ள 78 பள்ளிகள் என மொத்தம் 171 அரசு, கள்ளா், ஆதிதிராவிடா் நல மேல்நிலைப் பள்ளிகளுக்கு மொத்தம் 1, 162 மடிக்கணினிகள், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகத்துக்கு கொண்டு வரப்பட்டன. சம்மந்தப்பட்ட பள்ளிகளின் தலைமையாசிரியா்கள், ஆசிரியா்களை நேரடியாக வரவழைத்து மடிக்கணினிகள் செவ்வாய்க்கிழமை ஒப்படைக்கப்பட்டன.
தாய்லாந்து - கம்போடியா எல்லையில் பதற்றம்.. 4 வீரர்கள் பலி