திண்டுக்கல் மாவட்ட ஆட்சியரிடம் பழனியைச் சேர்ந்த சமூக அலுவலர்கள், மலைச்சாலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்ற வேண்டும் என வலியுறுத்தி மனு அளித்தனர். அரசு பேருந்துகள் குறுகலான சாலைகளில் உள்ள சாலையோர கடைகளில் நிற்பதால் விபத்துகள் ஏற்படுவதாகவும், கொடைக்கானல் நகர் பகுதி, மேல்மலை, கீழ்மலை பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் இடையூறு இன்றி செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.