இதுகுறித்து புறநகர் டிஎஸ்பி. சிபிசாய் சௌந்தர்யன் தலைமையில் தாடிக்கொம்பு காவல் நிலைய சார்பு ஆய்வாளர் பிரபாகரன் மற்றும் காவலர்கள் 3 சிறுவர்களை கைது செய்து அவர்களிடமிருந்து கத்தி உள்ளிட்ட ஆயுதங்களை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டனர்.
அதில் முன் விரோதம் காரணமாக இக்கொலை சம்பவம் நடைபெற்றதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. கொலை நடந்த சுமார் 2 மணி நேரத்தில் கொலையாளிகளை கைது செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.