திண்டுக்கல்: அரசு பேருந்து பணிமனை மெக்கானிக் விஷம் குடித்து தற்கொலை

திண்டுக்கல்லை அடுத்த பித்தளபட்டியைச் சேர்ந்த கருப்பையா (43) என்ற அரசு பேருந்து பணிமனை மெக்கானிக், குடும்பப் பிரச்சனை காரணமாக கடந்த 11-ம் தேதி பூச்சிக்கொல்லி மருந்து குடித்து தற்கொலைக்கு முயன்றார். திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் முதலுதவி பெற்று, மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், இன்று (13-ம் தேதி) சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து தாலுகா காவல் நிலைய ஆய்வாளர் பாலமுருகன் தலைமையிலான காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி