வத்தலகுண்டு அருகே ஆட்டு கிடா முட்டும் பந்தயம்

திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு பகுதியில் சவுத் லயன்ஸ் கிடா முட்டு நண்பர்கள் சங்கம் மற்றும் பொதுமக்கள் இணைந்து 2-ம் ஆண்டு ஆட்டுக்கிடா முட்டு பந்தயத்தை நடத்தினர். இதில் மதுரை, சிவகங்கை, தூத்துக்குடி, தேனி, திருச்சி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலிருந்து 140-க்கும் மேற்பட்ட ஆட்டுக்கிடாய்கள் பங்கேற்றன. வெற்றி பெற்ற கிடாக்களுக்கு ஸ்டீல் பீரோ, பித்தளை அண்டா, வீட்டு உபயோகப் பொருட்கள் உள்ளிட்ட பரிசுகள் வழங்கப்பட்டன. இந்நிகழ்வில் நூற்றுக்கணக்கான ரசிகர்கள் கலந்து கொண்டு உற்சாகப்படுத்தினர்.

தொடர்புடைய செய்தி