காந்திகிராமம்: பல்கலைக்கழகத்திற்கு A++ தரச்சான்றிதழ்

தேசிய தர நிர்ணயக் குழுமம் (NAAC) ஜூன் மாதம் காந்திகிராம கிராமிய நிகர்நிலைப் பல்கலைக்கழகத்திற்கு வருகைதந்து மதிப்பீடு செய்து, ஐந்தாண்டுகால (2019-2024) செயல்திறன்களை அடிப்படையாகக் கொண்டு, பாடத்திட்டம், கற்பித்தல் முறைகள், ஆராய்ச்சி, விரிவாக்கம், நிர்வாகம், திறனாக்கச் செயல்பாடுகள், புதிய கண்டுபிடிப்புகள் உள்ளிட்ட ஏழுவகைப் பரிமாணங்களில் ஆற்றியுள்ள செயல்பாடுகள் மற்றும் சாதனைகளை ஆராய்ந்தறிந்து பல்கலைக்கழகத்திற்கு 3.58/4.0 மதிப்பெண்களுடன் கூடிய உச்சபட்சத்தரக் குறியீடான A++ தகுதியை வழங்கியுள்ளது. 

இந்த அங்கீகாரச் சான்றிதழ் ஜூலை 31 தேதியன்று NAAC அமைப்பினால் GRI-யுக்கு வழங்கப்பட்டது. இதனை ஒட்டிப், பல்கலைக்கழகத் துணைவேந்தர், பேராசிரியர் என். பஞ்சநதம், பதிவாளர் (பொறுப்பு) முனைவர் எம். சுந்தரமாரி, NAAC தலைவர்கள் முனைவர் எம். ஜி. சேதுராமன்(ஓய்வு), முனைவர் ஜி. முரளிதரன் மற்றும் IQAC இயக்குநர் முனைவர் பி. யு. மகாலிங்கம் ஆகியோர் இன்று பத்திரிக்கையாளர் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

தொடர்புடைய செய்தி