திண்டுக்கல் தலைமை தபால் நிலையம் முன்பு தமிழ்நாடு விவசாயிகள் சங்கங்கள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மத்திய அரசின் உர விலை உயர்வைக்கண்டித்தும், மாநில அரசு கூட்டுறவு பயிர்க்கடன்களை தள்ளுபடி செய்யக்கோரியும் இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. மாவட்ட நிர்வாகிகள் தலைமையில் நடைபெற்ற இதில் விவசாயிகள் பலர் கலந்துகொண்டு கோஷங்களை எழுப்பினர். உர விலை உயர்வை திரும்ப பெற வேண்டுமெனவும் வலியுறுத்தப்பட்டது.